உள்ளூர் செய்திகள்
தெற்கு பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்துவிடம் மாணவர்கள் கேடயம் வழங்கிய காட்சி.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப்பரிசு

Published On 2022-05-20 14:54 IST   |   Update On 2022-05-20 14:54:00 IST
கல்லிடைக்குறிச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாக நின்று சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணி சுகாதார பணியாளர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரை பாராட்டி பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தி நினைவுப் பரிசாக கேடயம் வழங்கினர்.

அம்பை ஒன்றியத்தில் உள்ள தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் சேவையை பாராட்டி அளிக்கப்பட்ட கேடயத்தை பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து பெற்றுக் கொண்டார்.  

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தூய்மைப்பணி மற்றும் நிர்வாக சேவையைப் பாராட்டி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிப்பாண்டியனிடம் பள்ளி தாளாளர் அசன் வழங்கினார்.

காவல்துறையினர் சேவையை பாராட்டி அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ், கல்லிடை க்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோரிடம் மாணவர்கள் கேடயம் வழங்கினர்.

மருத்துவ துறை பணியாளர்கள் சேவையினை பாராட்டி வழங்கிய கேடயத்தை அம்பை அரசு மருத்துவ மனை மருத்து வர்கள் சண்முக சங்கரி, சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Similar News