உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
நாங்குநேரி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.
நாங்குநேரி:
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளம் மேலத்தெருவில் உள்ள சுப்பையா என்பவரது மனைவி மூக்கம்மாள் (வயது 55).
இவர் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு சிந்தாமணி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது மழை காரணமாக மின் கம்பத்தி லிருந்து கம்பி தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதில் மூக்கம்மாள் கால் மிதித்ததும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். அக்கம் பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மூலைக்கரைப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து மூக்கம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.