உள்ளூர் செய்திகள்
சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட திருவண்ணாமலை முலாம் பழங்கள்.

முலாம் பழம் விற்பனை அமோகம்

Update: 2022-05-20 09:18 GMT
வாழப்பாடியில் முலாம் பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
வாழப்பாடி:

கோடைக்காலம் தொடங்கினாலே சுட்டெ–ரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள பழச்சாறு அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அண்மைக்காலமாக, புட்டியில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதற்கே பெரும்பாலனோர் விரும்புகின்றனர்.

இதனால், கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து பருகுவதற்கேற்ற தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை பகுதியில் முலாம் பழம் பயிரிட்டுள்ள விவசாயிகள், சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ ரூ. 15-க்கு கூவிக்கூவி விற்பனை செய்யப்பட்டதால், ஏராளமானோர் விரும்பி வாங்கிச் சென்றனர். இதனால், குறைந்த நேரத்தில் அமோகமாக விற்பனையானதால் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
Tags:    

Similar News