உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. துரைமுருகன் தலைமையில் நடந்தது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-05-20 14:47 IST   |   Update On 2022-05-20 14:47:00 IST
வேதாரண்யத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமு ருகன் தலைமை வகித்தார் தாசில்தார் ரவிச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் மற்றும். தோட்ட கலைதுறை அலுவலர் வைரவமூர்த்தி பொது பணிதுறை ஆய்வாளர் நகராஜன் விவசாயி சங்கத்தை சேர்ந்த கிரிதரன், ராஜன், ஒளிச்சந்திரன, பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பையன், சோழன் உள்ளிட்ட ஏரளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
 கூட்டத்தில் ‘ சட்டமன்ற உறுப்பினருமான ஒ எஸ் மணியன் கலந்து கொண்டு தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திர ஆற்றில் ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் ஆற்றில் கடல் நீர் உள்புகுமால் இருக்கவும் கற்று நீரை தேக்குவதற்க்காக  ரூ.540 கோடியில் தடுப்பு அணை கட்டப்பட்டது  இந்த தடுப்பு அணை கட்டிய பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில்  உப்பு நீர் நன்னீராக மாறி வந்தது. 

இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு இறால் பண்ணைகளுக்கு தண்ணீர் இறைப்பதற்காக அணையின் கதவுகளை யாரோ திறந்து விட்டதால் கடல் நீர் உட்புகுந்து ஆற்று நீர் உப்பாக மாறி விட்டது இந்த சமூக விரோத செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மேலும் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் ஏழை எளிய மக்கள் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கு சாதாரண மண் கூட எடுக்க முடியவில்லை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர் தொடர்ந்து தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய் மா மரங்களை தாக்கும் தேன் பூச்சி நீர்நிலைகளையும் ஆறுகளையும் தூர்வார வேண்டும். 

 ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் குறிப்பாக வேதாரண்யம் பகுதிகளில் மணல் எடுக்க அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் நீர்நிலை ஓரம் உள்ள யூகலிப்டிஸ்மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி வேலைகளில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டு ம்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசினர்.அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து இருந்து விவசாயிகள் குறைகளுக்கு பதில் அளித்து பேசினார். 

கூட்ட முடிவி  ல்வேதா ரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன் கூறியதாவது வேதாரண்யம் பகுதியில் சதராண மண் எடுப்பது போன்ற பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் துறை சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News