உள்ளூர் செய்திகள்
நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா ஆய்வு செய்த காட்சி.

நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு

Published On 2022-05-20 14:46 IST   |   Update On 2022-05-20 14:46:00 IST
குமாரபாளையத்தில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வரும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா ஆய்வு செய்தார். 

நேரில் வந்த மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானா அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

இது குறித்து நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் கூறுகையில்,  குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நகர்நல மையம் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது.

 பல இடங்கள் பார்த்ததில்  உரிய இடம் தேர்வு செய்யப்படும் என்றார். அப்போது நகராட்சி கமிஷனர் விஜயகுமார், மண்டல பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், எஸ்.ஐ.க்கள் சவுந்திரராஜன், சந்தானகிருஷ்ணன், பட பலர் உடனிருந்தனர்.

Similar News