உள்ளூர் செய்திகள்
சேலம், நாமக்கல்லில் நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் பாடம் தேர்வு
சேலம், நாமக்கல்லில் நாளை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் பாடம் தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.
சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 182 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகின்றன.
2 நாட்கள் விடுமுறை
அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதி வருகின்றனர்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இதையடுத்து நேற்று மற்றும் இன்று என 2 நாட்கள் தேர்வுக்கு படிக்கும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் பாடம்
இதையடுத்து நாளை (21-ந்தேதி) சனிக்கிழமை தொழில் பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.15 மணி அளவில் முடிவடைகிறது.