உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் பகுதியில் வீதியில் சுற்றிதிரிந்த மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு
மார்த்தாண்டம் பகுதியில் வீதியில் சுற்றிதிரிந்த மூதாட்டி உறவினர்களிடம் ஒப்படைப்பு - உண்ணாமலைகடை பஞ்சாயத்து தலைவி பமலா நடவடிக்கை
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் மூதாட்டி ஒருவர் மழையில் நனைந்தபடி மூன்று நாட்களாக ரோட்டோரமாக சுற்றி திரிந்தார். அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் இது பற்றி உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவி பமலாவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நேரில் சென்று மூதாட்டியிடம் ஊர் மற்றும் பெயரை விசாரித்தார்.
ஆனால் மூதாட்டி எந்த பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.போலீசாரின் உதவியுடனும் விவரங்களை கேட்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் சமூக சேவகர் சிந்து குமார் மற்றும் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
அப்போது தான் மூதாட்டியின் பெயர் ஷியாமளா (60) என்பதும் அவர் சூரிய கோடு பகுதியில் உள்ள பொன்னப்ப நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் அந்த மூதாட்டியை பஞ்சாயத்து தலைவி மற்றும் சமூக சேவகர்கள் பத்திரமாக அவரது வீட்டில் கொண்டு ஒப்படைத்தனர். மூதாட்டியின் உறவினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.