உள்ளூர் செய்திகள்
நீதிமன்றம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு ஜெயில்

Update: 2022-05-20 07:47 GMT
சென்னை ஜாபர்கான்பேட்டையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை:

ஜாபர்கான்பேட்டை, ஜோதிலிங்கம் நகரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 66). இவர், கடந்த 2019-ம் ஆண்டு 8-வது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குமரன் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ரங்கநாதனுக்கு 10 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Tags:    

Similar News