உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு

Published On 2022-05-16 11:52 GMT   |   Update On 2022-05-16 11:52 GMT
தேவகோட்மடை மஞ்சுவிரட்டு விழாவில் போதை ஆசாமிகள் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
தேவகோட்டை

தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் ஏகாம் பரநாதர் கோவில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி த.மா.கா. மாநில செயலாளர் துரை கருணா நிதி தலைமையில் நடந்தது. 

வடமாடு மஞ்சு விரட்டு விழாவில் திருவேகம்பத் தூரை சுற்றியுள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வடமாடு மஞ்சுவிரட்டு நடந்து கொண்டிருக்கும்போது போதை ஆசாமிகள் விழா நடைபெறும் இடத்தில் வழிநெடுகிலும் ரகளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி உள்ளனர். 

பின்னர் அருகில் நின்ற துரை கருணாநிதியின் 4 சக்கர வாகனத்தை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய போது இதனை கண்ட பொது மக்கள் போதை ஆசாமி களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து த.மா.கா. மாநில செயலாளர் துரை கருணாநிதி கூறுகையில், சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சீர்குலைக்கும் விதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. 

அவற்றை தடுக்க தமிழக முதல்வர் சிறப்பு தனிப்படை அமைத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதிக அளவில் பொது மக்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை சரிவர செய்யவில்லை என கூறினார்.

Tags:    

Similar News