உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய கார்.

ராமநாதபுரம் அருகே தடுப்புசுவரில் கார் மோதி ஒருவர் பலி

Published On 2022-05-16 11:59 IST   |   Update On 2022-05-16 11:59:00 IST
ராமநாதபுரம் அருகே இன்று அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்:

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர்கள் முத்துலட்சுமி (வயது 52), முத்துக்குமாரசாமி (58), ராஜராஜேஸ்வரி (48), பழனி வேலாயுதம் (54), ஆவுடையம்மாள் ஜோதி (54), சண்முகசுந்தரி (57), சங்கரநாராயணன் (58), பழனி (58) ஆகியோர் கடந்த 14-ம் தேதி வேளாங்கண்ணிக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அருண் சசி (44) என்பவர் காரை ஓட்டினார். வேளாங்கண்ணியில் தரிசனம் செய்துவிட்டு இவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் வளமாவூர் விலக்கு அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த பழனி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவரை தவிர மற்ற 7 பேரும் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News