உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிதம்பரம் நடராஜரை இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை - இந்து முன்னணி கோரிக்கை

Published On 2022-05-16 11:27 IST   |   Update On 2022-05-16 11:27:00 IST
மனம் புண்பட்ட பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர்:

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜரையும், தில்லகாளியையும் இழிவாக பேசி இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் மனம் புண்பட்ட பக்தர்கள் போலீஸ் நிலையங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி புகார் அளித்துள்ளனர். 

நடராஜரை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், நடராஜர் கோவில் மீது அக்கறை உள்ளது போல் நடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேரில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக பேட்டி அளித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 

நடராஜரை இழிவுபடுத்தியவர்களை கைது செய்ய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Similar News