உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

Published On 2022-05-16 05:46 GMT   |   Update On 2022-05-16 05:46 GMT
இரண்டு தேர்களையும் தயார்படுத்த வசதியாக தேர்களுக்கு முகூர்த்தக்கால் நட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 6-ந் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம் 12-ந் தேதியும், வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் 13-ந் தேதியும் நடக்கிறது.

இரண்டு தேர்களையும் தயார்படுத்த வசதியாக தேர்களுக்கு முகூர்த்தக்கால் நட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து தேரில் ஆயக்கால் கட்டி தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் யாகசாலைக்கான தடுப்புகளில் வர்ணம் பூசுதல் மற்றும் சுவாமி படங்கள் வரையும் பணியும் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News