உள்ளூர் செய்திகள்
வில்லியனூர் அருகே சேலையில் தீ பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலியானார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே சிவராந்தம் காலனியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி கோகிலம் (வயது80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகமுத்து இறந்து விட்டதால் கோகிலம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் கோகிலம் டீ தயாரிக்க கியாஸ் அடுப்பை மெழுகுவர்த்தி மூலம் பற்ற வைத்தார். அப்போது மெழுகுவர்த்தி தீ எதிர்பாராத விதமாக கோகிலம் சேலையில் பற்றிக்கொண்டது. இதில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் கோகிலம் அலறி துடித்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோகிலத்தை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோகிலம் பரிதா-பமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது பேரன் வேலு கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.