உள்ளூர் செய்திகள்
மில்களை மூட அரசுக்கு உரிமை இல்லை- முன்னாள் எம்.பி.ராமதாஸ் கண்டனம்
சுதேசி, பாரதி மில்களை மூட புதுவை அரசுக்கு தார்மீக உரிமை இல்லை என்று முன்னாள் எம்.பி.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை-யில் கூறியிருப்பதாவது:-
புதுவை தொழில்துறை சுதேசி, பாரதி மில்களை இந்த மாத இறுதியில் மூடிவிட அரசுக்குப் பரிந்துரைத்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதனை அரசு நிராகரித்து மில்களை தொடர்ந்து இயக்கு-வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தொழில் நலிவுக்கான காரணங்களை ஆய்வு செய்து மில்களை புனரமைத்து சீரமைக்க வேண்டியது அரசின் கடமை. அவற்றை ஒரேடியாக மூடி வளர்ச்சியை முடக்குவது அல்ல.
20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மில்கள் நலிவுற்ற போது எம்.பி.யாக இருந்த நான் மத்திய ஜவுளித்துறை மந்திரி, தேசிய ஜவுளிக் கழக தலைவர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டு 2 மில்களையும் புதுவை அரசுக்கு பெற்றுத் தந்தேன்.
மில்களில் நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணத்தை குழு அமைத்து அரசு அறிந்திருக்க வேண்டும். மத்திய ஜவுளித் துறையில் உள்ள வல்லுநர்களை ஒரு குழுவாக அமைத்து ஆய்வு செய்தால் மாற்று வழிமுறைகளும் அதற்கு தேவையான நிதி உதவியும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். இதை ஏன் அரசு செய்யவில்லை?
இந்த மில்களை மூடுவதற்கான தார்மீக உரிமை இந்த அரசுக்கு இல்லை. ரோடியர் மில்லை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறும் கவர்னர் இந்த 2 மில்களையும் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் உள்ள ரோடியர், சுதேசி பாரதி, ஸ்பின்கோ, காரைக்காலில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் மில்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அரசின் மாநில உற்பத்திக்கும் ஏற்று-மதிக்கும், பட்ஜெட்டுக்கும் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.