உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

குடிநீர் இணைப்புக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்

Published On 2022-05-15 11:56 IST   |   Update On 2022-05-15 11:56:00 IST
மக்களிடம் அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
உடுமலை:

ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு வழங்க கூடுதலாக பங்களிப்பு தொகை வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் குருவம்மாள் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை கணக்கம்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு மக்களிடம் அரசு நிர்ணயித்த பங்களிப்பு தொகையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பங்களிப்பு தொகை குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News