உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை

அனுமதியின்றி போராட்டம்- அண்ணாமலை மீது வழக்கு

Update: 2022-05-14 08:20 GMT
திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று முன்தினம் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணாமலை, பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மீது திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags:    

Similar News