உள்ளூர் செய்திகள்
திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா இன்று

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2022-05-13 15:51 IST   |   Update On 2022-05-13 15:51:00 IST
மேலூர் அருகே திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவில் முகூர்த்த க்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த க்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி அடுத்த மாதம் 10-ந் தேதி யன்று திருக்கல்யாண வைப வமும், மறுநாள் (11-ந் தேதி) அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளுக்காக இன்று கோவிலில் திருவிழாவி ற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநாயகர், சுப்பிரமணியர், வேதநாயகி அம்மன், திருமறைநாதர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட கடவுளுக்கு முன்பு வைக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.தொடர்ந்து திருவிழா முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. 

கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறுவதால் இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News