உள்ளூர் செய்திகள்
அன்னையர் தின நிகழ்ச்சியில் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேசினார்.

அன்னையின் அன்புக்கு ஈடு இணை கிடையாது - உதவி போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

Published On 2022-05-13 10:17 GMT   |   Update On 2022-05-13 10:17 GMT
வல்லத்தில் நடந்த அன்னையர் தினவிழாவில் அன்னையின் அன்புக்கு ஈடு இணை கிடையாது என உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிருந்தா பேசியுள்ளார்.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் கிளை நூலகத்தில் அன்னையர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம் கிளை நூலக வாசகர் வட்ட செயலாளர் காஞ்சனா வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் சுயம்பிரகாசம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 

வல்லம் பேரூராட்சி தலைவி செல்வராணி கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிருந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, மனித இனத்தில் மட்டுமல்ல, கால்நடைகள், விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் கூட தாய் பாசத்தை அன்னையின் அன்பை நாம் காணமுடியும். அன்னையின் அன்புக்கு ஈடு இணையாக உலகில் வேறு எதையும் கூற முடியாது. 

வல்லம் போன்ற ஒரு சிறிய ஊரில் உள்ள கிளை நூலகத்தில் 40 ஆயிரம் நூல்கள் உள்ளன என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நூலகத்தை பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. நான் கூட இந்த நூலகத்திற்கு அடிக்கடி வருவதற்கு விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் பேசும்போது, தெய்வத்திற்கு நிகரான அன்னையின் ஆசி பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றார்.

இதில் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன், வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகையன், முதுகலை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர். விழாவில் வல்லம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நூலக புரவலர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள், மற்றும் நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வாசகர் வட்ட நிர்வாகிகள் நாராயணசாமி, எத்திராஜ், கஜேந்திரன், மேரி, பஷீர் அஹமத், ஆக்னஸ் செய்து இருந்தனர்.

 முடிவில் நூலக வாசகர் வட்ட துணைச்செயலாளர் பட்டுக்கொட்டை மனோகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News