உள்ளூர் செய்திகள்
சவுமியநாராயண பெருமாள்

தேரோட்டம்

Published On 2022-05-13 14:32 IST   |   Update On 2022-05-13 14:32:00 IST
திருக்கோஷ்டியூரில் சவுமியநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். 

இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கியது. தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான நாளை (சனிக்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி  நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலையில்  தேரோட்டம் நடைபெற இருக்கிறது. 

கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்ற காரணத்தினால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

இதற்கான  ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானமும் மற்றும் கோவில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

Similar News