உள்ளூர் செய்திகள்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி உறுத

நர்சுகள் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-05-12 10:48 GMT   |   Update On 2022-05-12 10:48 GMT
மதுரை அரசு மருத்துவமனையில் நர்சுகள் உறுதிமொழி ஏற்றனர்.
மதுரை

மருத்துவமனைகளில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், உயிருக்கு போராடு வோருக்கும் செவிலியர்கள் உயிர் காக்கும் கடவுளாக, பெற்ற அன்னைக்கு நிகராக அன்பு செலுத்தும் வெள்ளை தேவதைகளாக திகழ்கின்றனர்.

நர்சுகளின் உன்னத சேவையை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி செவிலியர்  தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை நர்சுகள் குடியிருப்பில் வெள்ளை தேவதைகள் தினம் இன்று காலை கொண்டாடப்பட்டது.

அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவச்சி லைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலு த்த ப்பட்டது. இதனை தொடர்ந்து செவிலியர்கள் அனைவரும் நோயாளிகளை குணப்படுத்த எங்களால் இயன்ற வகையில் சிறப்பாக பணிபுரிவோம் என்பவை உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நர்சுகள் சங்க மாநில துணைத் தலைவி கலை வாணி மற்றும் நிர்வாகி அமுதா உள்பட 300-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News