உள்ளூர் செய்திகள்
மதரை ரெயில் நிலையம்

புதிய வசதி அறிமுகம்

Published On 2022-05-12 10:38 GMT   |   Update On 2022-05-12 10:38 GMT
தானியங்கி ரெயில் டிக்கெட் எந்திரத்தில் மேலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை

முன் பதிவற்ற பயணச்சீ ட்டுகள் பெறுவதில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், திண்டுக்கல், ராமேசுவரம், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, புனலூர் ஆகிய இடங்களில் தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றில் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி உள்ளது. 

தற்போது புதிய முயற்சியாக க்யூ ஆர் கோட் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயி லாக பயணச்சீட்டு மட்டுமின்றி பிளாட்பாரம் டிக்கெட்டையும் பெற முடியும். ெரயில்வே சீசன் டிக்கெட்களையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

எந்திரத்தில் பயண விவரங்களை பதிந்தால், கணினி திரையில் க்யூ.ஆர்.கோட்  தோன்றும். அதனை அலைபேசி செயலி மூலம் ஸ்கேன் செய்து மின்னணு பணப்பரிமாற்றம் செய்யலாம். கட்டணத் தொகை செலுத்திய உடன் பயணச்சீட்டு வெளியே வரும். க்யூ.ஆர். கோடு பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டுகளில் பணப் பற்றும் செய்து கொள்ளலாம். இதனைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் https://www.youtube.com/watch?v=BEClkHPnQmU இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 

அதுவும் தவிர பணமில்லா பரிமாற்றம் பற்றிய விபரங்களை “ெரயில் மதாத்” செயலி அல்லது தொலைபேசி எண்: 139 மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலு வலகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News