உள்ளூர் செய்திகள்
எல்லை மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவுத்துறையில் விருதுநகர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சார் பதிவகங்கள் வருவாய் வட்டங்களின் அடிப்படை எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம் கலெக்டர் மேகநா தரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சார்பதிவகங்கள் எல்லை மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ேற்படி விவாதத்தில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும என பொதுமக்களால் கோரிக்கை மனு அளிக்க ப்பட்டது.
மேலும் குன்னூர் சார்பதிவகம், வத்திரா யிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுடன் செயல்பட வேண்டுமென பொது மக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவகத்தில் உள்ள கொங்கலாபுரம் கிராமம், சிவகாசி சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து பொதுமக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த கிராமம் சிவகாசி சார்பதிவகத்துடன் இணைக்கப்படுவது குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், துணைப்பதிவுத்துறை தலைவர்ஜெகதீசன் (மதுரை), மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சசிகலா (விருதுநகர்), விருதுநகர் பதிவு மாவட்ட அனைத்து சார்பதிவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.