உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவமனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-05-10 08:57 GMT   |   Update On 2022-05-10 11:01 GMT
சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தாயகம் கவி, திரு.வி.க. நகர் தொகுதியில் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிதாக நகர்புறங்களில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சமீபத்தில் பேரவை விதி 110கீழ் அறிவித்தார்.

அதன்படி சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரிய மருத்துவமனைக்கு மக்கள் அதிக அளவில் வருவதை தவிர்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.

மேலும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் பணிகள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News