உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-05-09 16:59 IST   |   Update On 2022-05-09 16:59:00 IST
திருப்பத்தூர் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள  தரியம்பட்டி கிராமத்தில் வழிவிடும் விநாயகர், வடக்கு வாசல் செல்வி அம்மன், கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

இதையொட்டி கடந்த 6-ந்தேதி மங்கல இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை ஆரம்பமானது. அன்று இரவு 8 மணி அளவில் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால,  நான்காம் கால யாக பூஜை நடைபெற்று   வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை யாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். 

அதனையடுத்து மூலவருக்கு கலசத்தில் இருந்த புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது.  பக்கத்து கிராமத்தினர் பலர் கோவிலுக்கு சீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பின்னர் குல தெய்வத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 

விழாவில் மாதவன் அம்பலம், முருகன் அம்பலம் , சாமிநாத குருக்கள், தண்டாயுதபாணி குருக்கள், ஊர் முக்கியஸ்தர் பரமசிவம்  உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News