உள்ளூர் செய்திகள்
கலெக்டரிடம் மனித பாதுகாப்புக கழகம் சார்பில் மனு

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்

Published On 2022-05-09 10:57 GMT   |   Update On 2022-05-09 10:57 GMT
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வாய்ப்பு : புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் : கலெக்டரிடம் மனித பாதுகாப்புக கழகம் சார்பில் மனு
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் மக்களிடம் மனுக்களை பெற்றார்.
அப்போது மனித பாதுகாப்பு கழக நிறுவனர் ஜெய்மோகன், பொதுச் செயலாளர் உஷா மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். 

அதில், நித்திரவிளை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் தற்காலிகமாக கடை திறப்பு நிறுத்தப்பட்டது.ஆனால் சிலரது அரசியல் செல்வாக்கு காரணமாக, அரசின் சட்ட திட்டங்களை மீறி சில நாட்களுக்கு முன்பு நித்திரவிளை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டாஸ்மாக் கடை யால் அந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News