உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்சையும், சாலையில் அமர்ந்துள்ள மாணவர்களையும் படத்தில் காணலாம்.

வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்தது

Published On 2022-05-09 15:12 IST   |   Update On 2022-05-09 15:12:00 IST
வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே  மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் 48 மாணவர்களை சுற்றுலா செல்வதற்கு தனியார் பஸ்சில் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். மாணவர்களை செஞ்சி கோட்டை மற்றும் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு வந்தவாசி வழியாக வீடு திரும்பி க்கொண்டிருந்தனர்.

வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பள்ளி மாணவர்கள் அலறி துடித்தனர். 

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அங்குள்ள இடத்தில் அமர வைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக 48  பள்ளி மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த பஸ்சை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட அதே பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Similar News