உள்ளூர் செய்திகள்
இடிந்த வீடு

காரமடை அருகே மழையால் வீடு இடிந்தது- தந்தை, மகன் தப்பினர்

Published On 2022-05-08 10:29 GMT   |   Update On 2022-05-08 10:29 GMT
நேற்றிரவு காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
 காரமடை:  

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள சாஸ்திரி நகரில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.இப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது,காரமடை சாஸ்திரி நகரில் வசித்து வரும் நடராஜ் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து சேசதம் அடைந்தது.  மேலும் ,மற்றொரு பக்க சுற்றுச்சுவரும் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். 

கனமழையின் போது நடராஜும், அவரது மகன் ரஞ்சித் குமார் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்தனர் .அதிர்ஷ்டவசமாக 2 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.அதனால் தங்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News