உள்ளூர் செய்திகள்
சாக்கோட்டை யூனியன் கூட்டம் தலைவர் சரண்யா தலைமையில் நடந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி யூனியன் கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்றார். 5-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சுப்பிரமணியன் பேசுகையில், ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் நமது யூனியனுக்குட்பட்ட பகுதியில் தொடங்கியதை வரவேற்கிறேன். தேசிய நெடுஞ்சாலையில் அலு–வலகம் அமைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். எனது வார்டில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் மட்டம் வீடுகளின் தரையைவிட உயரமாக உள்ளதால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார்.6-வது வார்டு உறுப்பினர் சொக்கலிங்கம் கூறுகையில், எனது கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில 20 அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன.அதில் சில நாடக மேடைகளிலும், மரத்தடிகளிலும், மோசமான கட்டங்களிலும் செயல்படுகின்றன. எனவே விபரீதம் ஏற்படும்முன் புதிய கடிடங்களை கட்ட வேண்டும் என்றார்.
1-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது, பள்ளத்தூரில் இருந்து கடியாபட்டி செல்லும் சாலை வனப்பகுதியில் வருவதால் சாலை அமைத்து 20 வருடங்களாகி விட்டது.முறையான அனுமதி வாங்கி சாலையை அமைக்க வேண்டும் என்றார். ஆணையாளர் பதிலளிக்கையில், மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி பள்ளிகள் குறித்த விவ–ரத்தை கேட்டுள்ளது.விரைவில் பள்ளிகளின் குறைகள் சரிசெய்யப்படும்.பத்திரப்பதிவு அலுவ–லகத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்க ஆவண செய்யப்படும். அங்கு மகளிர் திட்டம் மூலம் வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
தலைவர் சரண்யா செந்தில்நாதன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்.அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடைபெறும்.கோடைகாலமாக இருப்பதால் உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் நீர், மோர்ப்பந்தல்களை பொதுமக்களுக்காக அமைக்க வேண்டும். மின்சார குறைபாடு உள்ளிட்ட பிற குறைகள் சரி செய்யப்படும் என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிர மணியன், துணை தலைவர் கார்த்திக் உறுப்பினர்கள் சுப்பிர மணியன், சொக்கலிங்கம், ராமச்சந்திரன், தேவி மீனாள், யசோதா, தமிழ்ச்செல்வி, ஜெயந்தி, ரேவதி, திவ்யா பொறியாளர் கணேசன் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டன்ர்.