உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மருதுறை அரசுப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கண்காட்சி

Published On 2022-05-07 16:16 IST   |   Update On 2022-05-07 16:16:00 IST
இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளில் தயாரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
காங்கேயம்:

காங்கேயம் அருகே மருதுறையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கண்காட்சி நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் பா.கனகராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியா் பிரபு வரவேற்றாா். ஆசிரியப் பயிற்றுநா் வி.மோகன்ராஜ் கலந்து கொண்டு தன்னாா்வலா்களைப் பாராட்டிப் பேசினாா்.

இக்கண்காட்சியில் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளில் தயாரிக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதைப் பள்ளி மாணவா்களும் பெற்றோா்களும் கண்டு பயன் பெற்றனா். இதில் ஆசிரியா் ஜோசப், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் திவ்யா, ரஞ்சிதம், காயத்ரி, ராஜேஸ்வரி, மாலதி ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் காா்த்திகேயன் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

Similar News