உள்ளூர் செய்திகள்
கம்பனூர் ஊராட்சியில் மஞ்சு விரட்டு நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் கம்பனூரில் வாரிகருப்பர் அந்த நாச்சிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 120-ம் ஆண்டு மாபெரும் பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு நாட்டார்கள் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விரட்டு மஞ்சு விரட்டு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கம்பனூர் நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். முன்னோர்களின் பாரம்பரியம் மாறாமல் அனைத்து வீடுகளிலும் வந்திருந்த மாடுபிடி வீரர்க ளுக்கும், விருந்தினராக வந்த உறவுகளுக்கும் விருந்து உபசாரம் நடைபெற்றது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் நாச்சியாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த 20ககும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.