உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூய்மைப்பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம்- கிராமசபை கூட்டங்களில் தீர்மானம்

Published On 2022-05-03 14:59 IST   |   Update On 2022-05-03 14:59:00 IST
தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த வேண்டும்.
அவிநாசி:

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் மாத சம்பளமாக 3,600 ரூபாய் பெறுகின்றனர். வார விடுமுறை தவிர்த்து பணி செய்யும் நாட்களுக்கான தினக்கூலி வெறும்  ரூ.138 மட்டுமே. 

100 நாள் வேலை திட்டத்தில்தினசரி 280 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்அந்தளவு சம்பளமாவது வழங்கப்பட வேண்டும்  என தூய்மைப்பணியாளர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்  கிராம சபை கூட்டங்களில் பெரும்பாலான ஊராட்சிகளில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறுகையில், சம்பளம் குறைவு என்பதால்இப்பணியை செய்ய யாரும் வருவதில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் வீடுகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் இரு மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப  தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த வேண்டும்.

தூய்மை பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் வழங்கப்படும் என அரசு கூறி வரும் நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுதொடர்பான தீர்மானத்தை கிராம சபையில் நிறைவேற்றியுள்ளோம்என்றனர்.

Similar News