உள்ளூர் செய்திகள்
.

இடி விழுந்து 16 ஆடுகள் பலி

Published On 2022-05-03 14:48 IST   |   Update On 2022-05-03 14:48:00 IST
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி ஊராட்சி, வாளாங்காடு பகுதியில் இடி விழுந்து 16 ஆடுகள் பலியானது.
குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி ஊராட்சி, வாளாங்காடு பகுதியில் பொன்னுசாமி (வயது 63) என்பவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.  

வீடு அருகே இருக்கும் பட்டியில் தினமும் மாலையில் மேய்ச்சல் வேலை முடிந்து ஆடுகளை விட்டு அடைத்து விடுவார். நேற்றும் அதே போல் செய்தார்.  

திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்தது. காலை 6 மணியளவில் பொன்னுசாமி பட்டிக்கு வந்து பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்ட  20 ஆடுகளில் 16 ஆடுகள் இடி தாக்கியதில் இறந்து கிடந்தன. 

இதன் மதிப்பு ரூ. 2  லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வி.ஏ.ஓ. செந்தில்குமார்,   போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News