உள்ளூர் செய்திகள்
படுகாயம்

மறைமலைநகர் அருகே ஏ.சி. வெடித்து வாலிபர் படுகாயம்

Published On 2022-05-03 14:39 IST   |   Update On 2022-05-03 14:39:00 IST
மறைமலைநகர் அருகே ஏ.சி. வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:

மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் தங்கமாரியப்பன். இங்கு ராம்குமார்(21) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இரவு அவர், ஓட்டலின் மாடியில் தூங்கினார். அதிகாலை அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ராம்குமார் செல்போனில் பேசியபடி மாடியில் இருந்த ஏ.சி.யின் வெளிப்புற பெட்டியின் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பெட்டி வெடித்து தீப்பற்றியது. இதில் அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ராம்குமார் தீயில் கருகி அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ராம்குமாரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Similar News