உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
அனைத்து கடைக்காரர் களும் இலைகளைப் பயன்படுத்தி இறைச்சிகளை அடைத்து பொது மக்களுக்கு வழங்கி வருவதை பார்வையிட்டார்.
பொதுமக்கள் ஒரு சிலர் வீட்டில் இருந்து சாமான்களைக் கொண்டு வந்து இறைச்சியை வாங்கி செல்வதை பார்த்து அவர்களை பாராட்டினார். அனைவரும் முழுமையாக இதை கடைபிடிக்க கேட்டுக் கொண்டார்.