உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

Published On 2022-04-30 15:52 IST   |   Update On 2022-04-30 15:52:00 IST
மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவத்தனர்.
திருச்சி:

திருச்சி சமூக ஆர்வலர் பா .ஜான் ராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருச்சி மாவட்டம் லால்குடி அரசு பள்ளியில் பிளஸ் 2 பயின்று இறுதியாக தங்களுடைய தேர்வு முடியும் நேரத்தில் தான் பயின்ற பள்ளி வகுப்பறையை ஒரு கோவிலாக நினைத்து பள்ளிக்கு வெள்ளையடித்து,

வண்ணம் பூசிய 4 மாணவர்களுடைய சிறப்பான செயல் பாராட்டுக்குரியது. இந்த மாணவர்களுடைய செயல் தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரியான  சிறப்பான செயலாக இருக்கிறது. ஒரு சில பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் சமூக வலைதளங்களை

ஆக்கிரமித்துள்ள நிலையில் திருச்சி மாணவர்களின் செயல் நமக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் பயின்று வந்தவர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News