உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை

Published On 2022-04-30 15:04 IST   |   Update On 2022-04-30 15:04:00 IST
அத்தாணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல்:

அத்தாணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி அருகேயுள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (எ) கருப்புசாமி (61), இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் மருத்துவமனையில் சின்னசாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார், எனினும், இடுப்பு பகுதியில் உள்ள காயத்தில் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் சம்பவத்தன்று இரவு சின்னச்சாமி பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கினார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News