உள்ளூர் செய்திகள்
குடி போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி
பங்களாப்புதூர் அருகே குடி போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் அருகே குடி போதையில் ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது27). கட்டிட தொழி லாளி. இவருக்கு திருமண மாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், தியான வர்ஷசன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக விஜயலட்சுமி கணவரை பிரிந்து மகன் விக்னேஸ்வரனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பெரியாண்டவர் கோவில் திருவிழா நடப்பதால், விக்னேஸ்வரன் வீட்டை சுத்தம் செய்தார். தொடர்ந்து அவர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி சங்கிலிமடுவு பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விக்னேஸ்வரன் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.