உள்ளூர் செய்திகள்
.

பெரும்பாலை அருகே கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

Published On 2022-04-30 13:44 IST   |   Update On 2022-04-30 13:44:00 IST
பெரும்பாலை அருகே கிணற்றில் விழுந்து முதியவர் பலியானார்.
பெரும்பாலை. 

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை  அருகே கெண்டையனள்ளி அடுத்துள்ள காவக்காடு குண்டு பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது70). இவர்  வீட்டின் அருகே உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக இவர் தவறி விழுந்ததாக தெரிகிறது.

கடந்த 2 நாட்கள் கந்தனை  உறவினர்கள் தேடி வந்துள்ளனர். அப்போது   அருகே இருந்த கிணற்றில் சடலம் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர்  உறவினருக்கு தெரிவித்தனர். பின்னர் பெரும்பாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அந்த தகவலின் பேரில் பெரும்பாலை போலீசார் மற்றும்  பென்னாகரம் தீயணைப்பு மீட்புக் குழுவிற்கு தகவல் அளித்ததின் பெயரில்  மீட்பு குழுவினர் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Similar News