உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை

Published On 2022-04-30 09:57 IST   |   Update On 2022-04-30 09:57:00 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி கோகிலா (38). இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் கோகிலா தனது கணவரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் வீடு திரும்பிய கோகிலா குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் தான் கொண்டு வந்த சாணி பவுடரை குடித்தார். பின்னர் இதுகுறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ஜெயவேல் பதறி அடித்துக்கொண்டு குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்று அங்கு மயக்க நிலையில் இருந்த கோகிலாவை மீட்டு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது கோகிலாவின் உடல்நிலை மோசமடைந்ததால் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும்வழியிலேயே கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News