உள்ளூர் செய்திகள்
உலக புத்தக தினவிழா

உலக புத்தக தினவிழா

Published On 2022-04-29 15:16 IST   |   Update On 2022-04-29 15:16:00 IST
திருப்பத்தூர் அண்ணா பொது கிளை நூலகத்தில் புத்தக தினவிழா நடந்தது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா பொது கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமை தாங்கினார். 

வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் ஜெயகாந்தன் வரவேற்றார். திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் சிறப்புரையாற்றினார். 

திருப்பத்தூர் புதுப்பட்டி அரசு மேல்நிலைபள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பேரூராட்சி  தலைவர் வழங்கினார்.

தந்தானே ஈனா எழுதிய நற்சிந்தனை கதைகள் எனும் நூலை சிவகங்கை வாசகர் வட்ட தலைவர் அன்புதுரை அறிமுகம் செய்தார். கவிஞர் வைகை பாரதி வாஹித் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். மக்கள் இசை பாடகர் வைகை பிரபா நூலாசிரியரை அறிமுகம் செய்தார். பட்டிமன்ற நடுவர் அப்பச்சி சபாபதி வாழ்த்தி பேசினார்.

கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா எழுதிய ஒலிக்கட்டும் பறை எனும் கவிதை தொகுப்பு புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது. முனைவர் ஹேமாமாலினி அறிமுகம் செய்தார். நூலாசிரியரை அறிமுகம் செய்து புதுவயல் வாசகர் வட்ட தலைவர் தமிழ்மதி நாகராசன் பேசினார். கவிஞர் பொதிகை கோவிந்தராஜன் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். பூஜிதா கருத்துரை வழங்கினார்.  

பேராசிரியர் கோபிநாத், பாவலர் சக்திவேல், அன்னக்கொடி கமலநாதன், கவிஞர் லட்சுமி சிவபார்வதி, எழுத்தாளர்கள் மாரிமுத்து, ஈஸ்வரன், கவிஞர் பரம்பு நடராஜன், புரவலர்கள் ராஜசேகரன், கணபதி, இளையராஜா, சண்முகம், ஞானசேகரன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளர்களும், நாராயணன், குணசேகரன் ஆகியோரும் செய்திருந்தனர். கலைஞானம் நன்றி கூறினார்.

Similar News