உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை

Published On 2022-04-29 14:43 IST   |   Update On 2022-04-29 14:43:00 IST
அறிவிப்பு ஆணையை ரத்து செய்து விட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாலப்பர் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரனை கரைமேட்டு பகுதி குடியிருப்புகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி துணை வட்டாட்சியரிடம் அனு அளித்தனர்.

அந்த மனுவில், குருவாலப்பர் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரனை கரைமே்டுப் பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டிக் கொண்டு அனைத்து சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்துதந்துள்ளது.

இந்நிலையில் நாங்கள் குடியிருந்து வரும் பகுதி நீர்வள ஆதார அமைப்பிற்கு உரியதென்றும், 21 நாட்களுக்குள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று  வீடுகளில் அறிவிப்பு கடிதம் நகராட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

நாங்கள் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை எங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியில்தான் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். எனவே மேற்கண்ட அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், குருவாலப்பர் கோயில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கமலா, கிளை துணைத்தலைவர் மணிமேகலை, செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வள்ளி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News