உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை

9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பதில் உண்மை இல்லை- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Published On 2022-04-29 06:09 GMT   |   Update On 2022-04-29 08:38 GMT
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கூறியிருப்பதாவது:

புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. தேர்வு இல்லாமல் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்படும் என்பது தவறு.

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும். திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 6 முதல் 13ந்தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது.




Tags:    

Similar News