உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை நகரில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

சாலையோர பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2022-04-28 15:51 IST   |   Update On 2022-04-28 15:51:00 IST
தேவகோட்டையில் சாலையோர பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேவகோட்டை

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடைசெய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ்நிலையத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பஸ்நிலையம் அருகே எவ்விதமான பேனர்வைக்க அனுமதி வழங்க வில்லை. 

ஆனால் தற்போது திடீரென பஸ்நிலையபகுதியில் பேனர்கள் பிரமாண்டமான அளவில் வைக்கப்பட்டு வருகின்றன. பிளக்ஸ் பேனர் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. மேலும் நகரில் இறப்பு போன்ற நிகழ்வுக்காக மட்டுமே பேனர் வைக்கும் போதும் அதனை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை.

குறிப்பாக அருகிலேயே புறக்காவல்நிலையம் இருந்தும் காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பது சமூகஆர்வலர்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.

Similar News