உள்ளூர் செய்திகள்
பராமரிப்பின்றி கிடக்கும் பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான கழிப்றை.

குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது கழிவறை அமைக்கப்படுமா?

Published On 2022-04-28 14:54 IST   |   Update On 2022-04-28 14:54:00 IST
குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது கழிவறை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில்  பணி யாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் கழிவறை உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த அலுவலகத்திற்கு தின ம்தோறும் 500 மேற்பட்டோர் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வாங்கவும் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பட்சத்தில் பொது கழிவறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.   

மேலும் குன்னம் வரு வாய் வட்டாட்சியர்அலுவ லகத்தில் உள்ள 2 கழி வறைகளும் சரியான பரா மரிப்பின்றி முள்பு தர்கள் அடங்கி பயன்படுத்த முடி யாத நிலையில் அமைந்துள்ளது.  

எனவே மாவட்ட  கலெக்டர் குன்னம் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு பொது மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்றும், சிதலமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறையை சீரமைத்து தர  வேண்டும் என  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News