உள்ளூர் செய்திகள்
இறந்த தொழிலாளியின் உடலை எரிக்க முயற்சி
இறந்த தொழிலாளியின் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:
குன்னம் அடுத்துள்ள கீழப்புலியூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மதியழகன் (வயது36) இவரிடம் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ம பொடையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அங்கமுத்து (45) 3 மாதமாக தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று உடல் நல குறைவால் அங்கமுத்து இறந்துவிட்டார். இவரது உடலை மதியழகன் கீழப்புலியூர் உள்ள சுடுகாட்டில் ஊர் பொது மக்களிடம்கூறாமல் தானே அடக்கம் செய்ய சென்றுள்ளார் இதை அறிந்த ஊர் மக்கள் அவ்வாறு செய்வதை எதிர்த்து இவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் அங்கமுத்து உறவினர்கள் குறித்து தகவல் தெரியாததால் தானே புதைக்க ஏற்பாடு செய்ததாகவும் மதியழகன் கூறியதாக தெரிகிறது. மங்களமேடு போலீஸார் அங்கமுத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.