உள்ளூர் செய்திகள்
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்-தியாக எழுந்தருளி
எமனை வதம் செய்ததால் அட்டவீ-ரட்டத் தலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது
ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு நேற்று மாலை சசிகலா வந்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை மாணிக்-கவாசக தம்பிரான் சுவாமிகள் தலைமையில் மரியாதை
செய்து வரவேற்-பளிக்கப்-பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற சசிகலா கோ பூஜை, கஜ பூஜை, செய்த பின்னர் கள்ள விநாயகர், சுவாமி, அமிர்தகடேஸ்வரர், காலசம் ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி
சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார்.