உள்ளூர் செய்திகள்
முகமத் ரபி

சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் கோரிக்கை

Published On 2022-04-27 15:17 IST   |   Update On 2022-04-27 15:17:00 IST
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமத் ரபி கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளார்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமத் ரபி கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பிற்குரியது.

அதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் சங்கராபுரம் பகுதியை சுற்றி அதிகளவு கிராமங்களும், கல்வராயன் மலைப்பகுதிகளும் உள்ளது. இங்குள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு வாய்ப்பாக சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். இவ்வாறு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News