உள்ளூர் செய்திகள்
உளுந்து செடியை பறித்து தூற்றி அடிக்கும் தொழிலாளர்கள்.

மழையால் உளுந்து பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை

Published On 2022-04-26 14:49 IST   |   Update On 2022-04-26 14:49:00 IST
திருமருகல் ஒன்றியத்தில் மழையால் உளுந்து பயிர்கள் சேதமடைந்தன.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் உளுந்து, பயறு சாகுபடி  செய்துள்ளனர். குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் குறைந்த அளவு மகசூல்

கிடைத்தது.இதைதொடர்ந்து உளுந்து மற்றும் பயறு சாகுபடி பணியை திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமருகல்

ஒன்றிய பகுதியில் சாகுபடி செய்து அறுவடை நடைபெறும் வேளையில் மழை பெய்ததால் செடிகள் சேதமடைந்து காணப்படுகிறது.இதனால் ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய

உளுந்து, பயறுகள் ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை, சம்பா,

தாளடி சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை கடன் வாங்கி மேற்கொண்டு வந்தோம். தற்போது பெய்த மழையால் உளுந்து, பயறு

பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.65 முதல் ரூ.68 வரை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து, பயறு தற்போது ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால்செலவு செய்ததை விட மிக குறைந்தளவே

கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Similar News