உள்ளூர் செய்திகள்
விளையாட்டு விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேசினர்.

புத்தூர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2022-04-25 15:18 IST   |   Update On 2022-04-25 15:18:00 IST
சீர்காழி அடுத்த புத்தூர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழி அடுத்த புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு மாவட்ட, மாநில மற்றும் இந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பேசி பரிசு வழங்கினார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்விதுறை பேராசிரியர் முனைவர் பாலமுருகன், மனவள பயிற்றுனர் பாபுநேசன், ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சாமிகணேசன், கண்ணையன், மயிலாடுதுறை அமைச்சர் கபடி கழக செயலாளர் ஜே.ஹென்ரி, உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லத்துரை, ரஜினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர். 

இதில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன் விளையாட்டுத்துறையில் 2021-22 வரை சாதித்த மாணவ மாணவிகள் விபரங்களை ஆண்டறிக்கையாக வாசித்தார். பேரவை பொறுப்பாசிரியர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் நாராயணசாமி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார், வணிக நிர்வாகிகவியல் துறை தலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சீர்காழி மாஸ்டர் தினேசின் மாவீரன் சிலம்பாட்ட குழு இளம் சிலம்ப வீரர்கள் 50 பேர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இறுதியாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றிக் கூறினார்.

Similar News