உள்ளூர் செய்திகள்
ரூ.8.70 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் ரூ.8.70 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை காவேரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 862.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய்
8.70 கோடி மதிப்பீட்டில் 49 பணிகளை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. முன்னிலையில், மாவட்ட கலெக்டர் இரா.லலிதா இன்று தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி பாலூர் பகுதியில் சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:&
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சிறப்பு தூர் வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 49 பணிகள், 849 கி.மீ தூரத்திற்கு உள்ள வாய்க்கால்கள் து£ர் வார ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8.70 கோடி செலவில் தூர் வாரும் பணிகள் நடக்கிறது.
இவ்வாண்டு ஏப்ரல் மாத கடைசியில் துவங்கி காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இங்கு வருவதற்குள் எல்லா வாய்க்கால்களும் தூர்வாரப்படும் என்று ஆணையிட்டதற்கிணங்க, இதற்கான மதிப்பீடுகள் தயாரித்து இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை ஜூன் முதல் வாரத்திலேயே முடிந்துவிடும். ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து இங்கு வருவதற்கு 20-ம் தேதி ஆகும் அதற்கு முன்கூட்டியே
49 வேலைகளும் முடிக்கப்படும். இதற்காக சிறப்பாக 70 எந்திரங்கள் இரண்டு ஷிப்டாக ஏற்பாடு செய்து அதற்கு முன்னதாகவே முடிக்கப்படும்.
இது மட்டுமில்லாமல் விவசாயிகள் கருத்துக்கள் கேட்டு இன்னும் ஒரு சில பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து
அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து
800 கி.மீ உண்டான கால்வாய்கள் தூர் வார நடவடிக்கை எடுத்துள்ளோம். அதை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முடிக்கலாம்.
இந்த வருடம் காவேரியிலிருந்து தண்ணீர் வருவதற்குள் கடைமடை வரைக்கும் வருவதற்க்கு அனைத்து வாய்க்கால்களும் எடுத்து கொண்டு உள்ளோம். சென்ற ஆண்டு தூர் வார எடுக்கப்பட்ட பணிகள் ஏதுவும் இவ்வாண்டு எடுக்கப்படவில்லை.
மேலும் 49 பணிகளை கண்காணித்திட 49 வேளாண்மை உழவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சமந்தப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளனர்.
இவர்கள் இப்பணிகள் சரியான முறையில் பணிகள் நடைபெறுகிறதா? குறித்த ஆழத்திற்கும் அகலத்திற்கும் கால்வாய்கள் அமைக்கப்படுகின்றதா? என்பதை கண்காணிப்பார்கள் என்றார.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) சண்முகம், செம்பனார்கோவில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், இணை இயக்குநர் வேளாண்மைத்துறை சேகர், உதவி பொறியாளர் விவேகானந்தன், விஜயபாஸ்கரன், வீரப்பன், எடுத்துக்கட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பைலட், திருக்களாச்சேரி ஊராட்சி தலைவர் சம்சத்ரபிக் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.